1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (10:54 IST)

தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட்

காஷ்மீரில் தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட் வழங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் நாளை தாசில்தார் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்விற்காக விண்ணப்பித்தவர்களின் ஹால்டிக்கெட்டுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 
 
கழுதை படத்துடனும் ‘பழுப்பு கழுதை’ என்ற பெயருடனும் ஹால்டிக்கெட்டை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த  ஹால்டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் கேலிக்கையாக பேசப்பட்டாலும் மறுபுறம் அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. 
 
இதேபோல் காஷ்மீரில் கடந்த 2015-ம் ஆண்டு மாநில அரசு நடத்திய நுழைவுத்தேர்வு ஒன்றுக்கு பசுவுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.