வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (18:39 IST)

முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

Minister Ragupathi
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த முருகன் உள்பட 4 பேருக்கு பாஸ்போர்ட் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் முருகன் உள்பட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முருகன் உள்ளிட்ட 4 பேரும் அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva