1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (11:24 IST)

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை!

ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை. 

 
சிறப்பு பஸ்கள் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது 700-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. கூட்டத்தை பார்த்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்க தொடங்கினர். 
 
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து நடத்திய சோதனையில் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.