1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (18:24 IST)

அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை

மழை, வெள்ளத்தை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் பல பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க அலைக்கழிக்கும் நிலை உள்ளது. இதை பயன்படுத்தி சிலர் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து எச்சரித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர், அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.