அயோத்தி ராமர் கோவிலால் எங்களுக்கு பிரச்சனையில்லை, ஆனால்.. அமைச்சர் உதயநிதி..!
அயோத்தியல் ராமர் கோவில் கட்டியதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில் அந்த கட்டிடத்தை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டுவதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமர் பிறந்த இடம் ஆன அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பல முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்..
இந்த நிலையில் திமுக சார்பில் ராமர் கோவில் திறப்பு விழாக்கு செல்வது குறிப்பு இதுவரை எந்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் அமைச்சர் உதயநிதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நாங்கள் எந்த மதத்திற்கும் எந்த நம்பிக்கையும் எதிரானவர்கள் அல்ல என்றும் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டுவதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva