செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (12:05 IST)

ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் கிடையாதா??

வீடுகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.

 
மின் கணக்கீடு செய்ய முறையில் டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் மின் வாரியத்தில் ஏற்பட்ட 900 கோடி இழப்பை சரிசெய்ய ஸ்மார்ட் மீட்டர் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய ஆய்வு செய்த சீர்திருத்தங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக மின் பராமரிப்பு பணிகள் இல்லாமல் இருந்த நிலையில் பத்தே நாட்களில் திமுக அரசு பராமரிப்பு செய்து சாதனை செய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் மாற்றிவிட்டால் மின் நுகர்வோர்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் வேலைப்பளு குறையும் என்பதும் ஆன்லைன் மூலமே மின்சார கணக்கெடுப்பு மற்றும் மின்சார கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வீடுகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.