1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2023 (07:55 IST)

தமிழக வரலாற்றில் மின்நுகர்வில் சாதனை.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

Senthil Balaji
தமிழக வரலாற்றில் நேற்றைய மின் நுகர்வில் சாதனை செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வரலாற்றில் நேற்று மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய மின் தேவை எந்தவித தடையும் என்று ஈடு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்ன தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு 40 கோடி யூனிட்டுகளாக இருந்த நிலையில் நேற்று 41.30 கோடி என அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மெகாவாட் அளவில் நேற்று மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 18,882 என எட்டி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva