வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (07:43 IST)

செந்தில் பாலாஜியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்? அமைச்சர் பதவி தூக்கப்படுகிறதா?

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருக்கும் நிலையில் இன்று அவர் ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முதல்வர் ஸ்டாலின் சென்று அவரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அளித்த புகாரில் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது.  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததால் நீண்ட நாட்களாக அவர் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் இதையடுத்து நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.  அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் தான் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்படுவதால் அமைச்சர் பதவியை பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவரிடம் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva