செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (14:07 IST)

மது, பிரியாணியுடன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடிமகன்கள்

சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் வளர்ந்த நாய்க்கு, கடைக்கு வரும் குடிமகன்கள் வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர்.

 
சிககங்கை அருகே உள்ள மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடையில் பெண் நாய் ஒன்று தஞ்சம் அடைந்து வளர்ந்து வந்துள்ளது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அந்த நாய்க்கு கருத்தம்மா என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் அந்த நாய் கருவுற்றுள்ளது.
 
இதை அறிந்த ஊழியர்கள் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை கருத்தம்மாவுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். விழாவிற்கு டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் விழாவிற்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர்.
 
விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு மதுவுடன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வளைகாப்பு நடத்தியவர்கள் கூறியதாவது:- 
 
கருத்தம்மா கடைக்கு வந்த நாள் முதல் மிகவும் விசுவாசமாக காவல்பணியை செய்து வந்தது. அதனால் நன்றி கடனாக மனிதர்களின் முதல் பிரசவம் நல்லபடியாக நடக்க வளைகாப்பு செய்வது போல் நாய்க்கும் செய்தோம் என்று கூறினர்.