திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:51 IST)

தமிழகத்தில் ராம(சந்திர) ராஜ்ஜியம் அமைப்போம்! – செல்லூர் ராஜூ உறுதி!

ராமராஜ்ஜியத்தை நோக்கி நாடு முன்னேறுவதாக ஆளுனர் பேசியது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுனர் இந்தியா முழுவதும் ராம ராஜ்ஜியத்தை நோக்கி முன்னேறி வருவதாக பேசியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “பத்தாண்டு காலம் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம், அப்போது அனைத்து மக்களும் சுபிட்சமாக நலமாக வாழ்ந்தார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராமராஜ்ஜியத்தை கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் திமுக ஆட்சி குறித்து பேசிய அவர் “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.