”புலிகேசியாகிறார் புகழேந்தி”..பங்கமாய் கலாய்க்கும் தினகரன்

Arun Prasath| Last Updated: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (15:29 IST)
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அமமுக செய்தி தொடர்பாளர் சென்றதை தொடர்ந்து, அக்கட்சியின் செயலாளர் டிடிவி தினகரன் “புகழேந்தி புலிகேசியாக உருவெடுக்கிறார்” என கூறியுள்ளார்.

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி சற்று நேரத்திற்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். இதனை தொடர்ந்து நிரூபர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, முதல்வர் எடப்பாடி தனக்கு நெடுநாள் நண்பர் எனவும், ஜெயலலிதா மறைவிற்கு பின்பு இந்த கட்சியை கட்டி காத்தவர் எடப்பாடி எனவும் புகழ்ந்தார்.

மேலும் இடைத்தேர்தல் வெற்றிக்கும், தீபாவளிக்கு வாழ்த்துகளும் கூற வந்ததாகவும் கூறினார். இந்நிலையில்  தற்போது இது குறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 
பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து வந்தபின்பு நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் “புகழேந்தி 24 ஆம் புலிகேசியாக உருவாகிறார் என கூறியுள்ளார். மேலும் கத்திர்க்காய் முத்தினால், சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும் எனவும் கூறினார்.

புகழேந்தி தானாக சென்று முதல்வரை சந்தித்ததால், புகழேந்தி அதிமுகவில் இணையப்போகிறாரா? என அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :