ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:34 IST)

திமுகவின் தொலைபேசிக்கு 6 லட்சம் பேர் உதவி கேட்டது குறித்து அமைச்சர் ராஜேந்தர் பாலாஜி விமர்சனம் !

கொரொனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பட்டுள்ள நிலையில்,  மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள், மனித நேய செயல்பாட்டாளர்கள்,  சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழில்நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில்  திமுகவின் தொலைபேசிக்கு ஒரே நாளில் 6 லட்சம் பேர் உதவி  கேட்டுள்ளாதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

அதில், திமுகவின் தொலைபேசிக்கு ஒரேநாளில் 6 லட்சம் பேர் உதவி கேட்டது என்பது ஒரு ஜிபூம்பா வித்தை. நான் திமுகவின் தொலைபேசிக்கு முயற்சித்தபோது என்னால் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை . திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் கண்டுபிடிக்கும் தலைவராக உள்ளார் என தெரிவித்தார்.