1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (18:05 IST)

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாக்கா மாற்றம்: புதிய போக்குவரத்து துறை அமைச்சர் யார்?

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அந்த துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார் 
 
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்துத் துறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது 
 
திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சர்கள் மாற்றம் தற்போது நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது