புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (09:18 IST)

அமைச்சர் சிவசங்கருக்கு 2 ஆவது முறையாக கொரோனா தொற்று!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆம், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது.  
 
இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் சிவசங்கர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.