1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (11:03 IST)

அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Ponmudi
அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக அமைச்சர் பொன்முடி மீது புகார் அளிக்கப்பட்டது. கடந்த 1996-2001ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை என்றும், அதனல் நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்வதாக  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
Edited by Mahendran