வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்து: அமைச்சர் பொன்முடி கண்டனம்
வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, வெளிநாடு முதலீடுகள் விவகாரத்தில் உண்மை தன்மையை தெரிந்து ஆளுநர் பேச வேண்டும்.
அதேபோல், தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளன
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முரணாக உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரசியல் செய்யும் நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக கல்வித்துறையில் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
Edited by Siva