1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister ponmudi announced engineering college counselling date

முன்கூட்டியே தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

Ponmudi
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே பொறியியல் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 
பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது குறித்து ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து முன்கூட்டியே கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 
 
அதன்படி ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு பதிலாக ஜூலை இரண்டாம் தேதி பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 24ஆம் பொது பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!