தொடர்புடைய செய்திகள்
- ஆவின் பாலில் ‘ஈ’: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம்: அமைச்சர் நாசர்
- ஆவின் இனிப்பு வகைகள் ரு.80 வரை விலை உயர்வு: இன்று முதல் அமலுக்கு வந்தது
- சிறுமி டான்யாவுக்கு படிப்பு செலவு; இலவச வீடு! – அமைச்சர் நாசர் அறிவிப்பு!
- ஆவினில் 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம் - விலை விவரம்!
ஆவின் பொருட்களில் ‘ஹலால்’ வார்த்தை: அமைச்சர் நாசர் விளக்கம்!
ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தை இருந்ததை அடுத்து பெரும் சர்ச்சைக்குரிய ஆகியுள்ள நிலையில் இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ஹலால் என்ற வார்த்தை ஆவின் பொருட்களில் இருந்ததை அடுத்து பலர் இது குறித்து விளக்கம் கேட்ட நிலையில் இது குறித்து விளக்கமளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஹலால் என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும் என்றும் அதனால்தான் அந்த வார்த்தை அச்சிடப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் ஹலால் என்ற வார்த்தை அச்சிடும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்
முன்னதாக ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தையை அச்சிடப்பட்டு இருந்ததால் அதை புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதனால் அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
