ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம்: அமைச்சர் நாசர்
ஆவின் நிறுவனம் தினந்தோறும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்
ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது குறித்து விளக்கமளித்த அமைச்சர் நாசர், ஆவின் நிறுவனம் தினமும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் அதனால்தான் இனிப்புகள் விலை உயர்த்தப்பட்டதாகவும் கூறினார்
எனினும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் சுகர்லெஸ் பொருட்களுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று கூறிய அமைச்சர், நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை குறைந்த விலையில் பால் விற்பனை செய்து வருகிறோம் என்றும் கறந்த பால் கலப்படம் இல்லாமல் விற்பனை செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்