வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (22:10 IST)

பாகிஸ்தானில் இந்து டாக்டர் சுட்டுக் கொலை!

beerbal genani
பாகிஸ்தான் நாட்டில் இந்து மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்குள்ள கராச்சி மா நகராட்சியின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. இவர் கண் மருத்துவதிதின் நிபுணத்துவம் பெற்றவர் என்று பெயரெடுத்திருந்ததால் அப்பகுதியில் பிரபலமானவராக இருந்ததுடன் தனியாக கிளினிக் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு இவர் கிளினிக் முடிந்து காரில் தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவருடன் கிளினிக்கில் பணிபுரியும் பெண் ஒருவரும் சென்றார்.

அப்போது, காராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சென்று கொண்டிருக்கும்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் டாக்டரின் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து டாக்டர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே பலியானார்,. கார் அங்கிருந்த சுவற்றின் மீது மோதியது. இதில், அவருடன் பயணித்த பெண்ணுக்கும் உடலில் குண்டுகள் பாய்ந்து, உயிருக்குப் போராடினார்.

அருகிலிருந்தோர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த  மாதத்தில் கொல்லப்பட்ட 2 வது இந்து டாக்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.