திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (14:20 IST)

டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி..!

muthusamy
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று செய்தியாளளை சந்தித்தபோது டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை என்று கூறினார்.
 
டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், தவறான பாதைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
குடிப்பதை நிறுத்தி, அதனால் வருமானம் குறைந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிய அமைச்சர் முத்துசாமி, ‘மதுபானங்களை டெட்ரா பாக்கெட் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும், 40 சதவீதம் பேர் மற்றவர்களுக்காக காத்திருந்து மது அருந்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் டாஸ்மாக் கடைக்கான நேரத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் கேமிரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், வருமானத்தை அதிகரிப்பது நோக்கமல்ல, தவறான பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பது தான் நோக்கம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்,.
 
Edited by Mahendran