செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (07:06 IST)

பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சரின் மூக்கில் இருந்து திடீரென ரத்தம்.. பெரும் பரபரப்பு!

பத்திரிகையாளர் சந்திப்பில் திடீர் என மத்திய அமைச்சரின் அமைச்சர் மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் புதிய எம்பிக்கள் பதவியேற்று முதல் பாராளுமன்ற கூட்டமும் நடைபெற்ற முடிந்து விட்டது என்பது தெரிந்தது.

 இந்த நிலையில் மத்திய அமைச்சர் குமாரசாமி நேற்று பெங்களூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தபோது திடீரென அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் கர்சீப்பை எடுத்து மூக்கை பொத்திக் கொண்டே இருந்த நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததாகவும் தற்போது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது நின்று விட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் குமாரசாமி சரியாக ஓய்வு எடுக்காத நிலையில் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அதனால்தான் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும் இது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்றும் அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva