செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (20:50 IST)

மத்திய அமைச்சர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை: அமைச்சர் துரைமுருகன்

மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால், அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்த பின் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது மத்திய அமைச்சர் ஹிந்தியில் பேசியதால் அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை என்றும் கர்நாடகாவில் இருந்து தற்போதைய சூழலில் தடை என்று தண்ணீர் வருகிறது என்று தெரிவித்தார்.
 
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றபின் துறை சார்ந்த அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என்றும் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்று தெரிவித்தார்.
 
மேலும் காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம் என்றும் முல்லை பெரியாறு பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
 
Edited by Siva