1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (12:37 IST)

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஏன்? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்..!

kkssr
நேற்று திடீரென தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர் என்பதும் சுமார் 33 கோடிக்கு அதிகமாக கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இலஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் பல முக்கிய அதிகாரிகள் இதில் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களை அதிர வைத்துள்ள இந்த சோதனை குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
மக்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பது சோதனைகள் மூலம் மட்டுமே குறையும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran