திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (08:19 IST)

கம்பேக் கொடுக்க மாஸான கதை கேட்டு வரும் நடிகர் கரண்!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர் கரண். அதன் பின்னர் 90 களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து கலக்கினார். குறிப்பாக அவரின் வில்லன நடிப்பு ரசிகர்களால் இன்றளவும் நினைவு கூறப்படும் நடிப்பாக அமைந்துள்ளது.

2000 களுக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்தார். அதில் கருப்பசாமி கொக்கி மற்றும் குத்தகைதாரர் உள்ளிட்ட சில படங்கள் வெற்றிப்படமாக அமைந்தன. ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவியதால் சினிமாவில் இருந்து விலகி, அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்படுகிறது.

சினிமாவில் அவர் தலைகாட்டி பல வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க கதைகளைக் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.