அவங்களுக்கு அரிசி, கோதுமை மட்டும்தான்; உங்களுக்குதான் எல்லாம்! – அமைச்சர் காமராஜ்

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 2 அக்டோபர் 2020 (15:35 IST)
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுவது குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் நேற்று முதலாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் எந்த பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் வெளி மாநிலத்தவர்களும் தமிழகத்திற்குள் ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதால் ரேசன் பொருள் பற்றாக்குறை ஏற்படுமோ என மக்களிடையே ஐயம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் “மக்களுக்கு எந்த இடர்பாடுகளும் எழாமல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து ரேசன் கடைகளிலும் தேவையான அளவு ரேசன் பொருட்கள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மக்களுக்கு ரேசன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு வழக்கம்போல வழங்கப்படும் எண்ணெய், பருப்பு, சர்க்கடை ஆகியவை தொடர்ந்து விநியோகிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :