புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:05 IST)

நாய்க்கு பிஸ்கட் போடுவது போல மேடையிலிருந்து பரிசுகளை வீசிய அமைச்சர்

கர்நாடகாவில் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஒருவர் நாய்க்கு பிஸ்கட் போடுவது போல பரிசுகளை தூக்கி எறிந்த வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
 
கர்நாடக மாநிலம் ஹாலியாலில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்த கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே நாய்க்கு பிஸ்கட் போடுவது போல, வீரர்களுக்கு பரிசுப்பொருட்களை தூக்கி எரிந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.