அடுத்த பிரதமர் யார்...? கருத்துக் கணிப்பு முடிவுகள்...
நரேந்தர் மோடி பா.ஜ.க.கட்சியில் சாதாரண நிலையில் இருந்து கட்சியின் உறுப்பினராக மாறி தன் திறமையால் குஜராத்தின் முதல்வரானார். அதன் பின் அவரது திறமையான நிர்வாகத்தால் பூகம்பத்தால் உருக்குழைந்திருந்த குஜராத் முன்னனி மாநிலமாக வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் அவர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் இந்தியாவில் பெருமளவு பொருளாதார மந்தம் ஏற்பட்டது.பின் அந்த சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுகொண்டது. அதற்கடுத்ததாக ஜி.எஸ்.டிவரி கொண்டு வந்தார்.அதுவும் பல கருத்து விவாதங்களை எழுப்பியது.
பிரதமரின் முக்கியமாக திட்டம் கருப்புப் பணம் ஒழித்தல் இந்தியா முழுவதும் ஒரே வரியை ஏற்படுத்துதல்மற்றும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துதல் . இதனை ஓரளவு நிறைவேற்றினார் . இதில் முக்கியமாக பணிமதிப்பிழப்பு நடவடிக்கையில் கருபுப் பண முதலைகள் முடங்கிப் போயினர். இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது மக்களிடம் அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.இதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு ஆட்சி மீது 63 % பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மோடி மீண்டும் பிரதமராக 50 % மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .