வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:02 IST)

எம்.ஜி.ஆருக்கு பிறகு எடப்பாடியார்தான்! – கடம்பூர் ராஜூ உறுதி

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆருக்கு நிகரான சாதனையை எடப்பாடியார் செய்வார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என திமுகவினரும் திடமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். தமிழக அரசியல் வரலாற்றிலேயே எம்.ஜி.ஆர் காலத்தில்தான் அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்தது. இந்த முறை தேர்தலில் வெல்வதன் மூலம் அந்த சாதனையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செய்யும்” என கூறியுள்ளார்.