வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (17:33 IST)

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் மீம்ஸை பாராட்டிய அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமாரை கேலி செய்து வெளிவந்த மீம்ஸுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
அமைச்சர் ஜெயக்குமாரின் புகைப்படத்தை வைத்து இது என்ன பாடல் என்று கண்டுபிடியுங்கள் என்ற மீம்ஸ் வலம் வந்தது. இந்த மீம்ஸை கண்டு சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது. 
 
இந்த மீம்ஸ் அவரது வழுக்கை தலையை கேலி செய்து வெளியிடப்பட்டது. இதற்கு தற்போது ஜெயக்குமார் மீம்ஸ் வெளியிட்டவரை பாராட்டியுள்ளார். மாணவர்களுக்கான சைபர் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:-
 
என்னுடைய தலையை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ. இந்த மீம்ஸ் ஒரு நல்ல படைப்பாற்றல் என்று கூறினார்.
 
மேலும், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு என தலையில் மோடி யோகா செய்வது போன்ற மீம்ஸ்களும் வலம் வந்தன என்று கூறியுள்ளார்.