1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (18:00 IST)

தினகரனை சந்தித்த 4 அதிமுக எம்.எல்.ஏக்கள்; பரபரப்பு தகவல்

அதிமுகவில் இருந்து தனி அணியாகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியாகவும் செயல்பட்டு வரும் தினகரன் கட்சியில் ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்பட 19 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுகவில் உள்ள 4 எம்.எல்.ஏக்கள் டி.டி.வி.தினகரனை திடீரென ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
தற்போது குற்றாலத்தில் டிடிவி தினகரனும் அவருடைய ஆதரவாளர்களும் ரகசிய ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் 4 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி மேலும் 4 எம்.எல்.ஏக்கள் அணி மாறினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விரைவில் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.