ஒரே நாளில் ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள் !

Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (09:31 IST)
ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலிஸாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு ரீமேக் படமான 100 % காதல் படம் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருந்து வருகிறது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுடன் அர்ஜுன் ரெட்டி புகஷ் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது இத்திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதே தேதியில் பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சித்தார்த் நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படமும் வெளியாகத் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரண்டு படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதால் ஏதாவது ஒருப் படம் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :