புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:35 IST)

காவல்துறை அதிகாரி மரணத்திலும் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்: ஜெயகுமார்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன்  மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டரில், ‘காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று கூறியிருந்தார்.
 
முக ஸ்டாலினின் இந்த டுவிட்டுக்கு இன்று பேட்டி ஒன்ரில் பதில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘காவல் அதிகாரியின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் ஸ்டாலினுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் களியக்காவிளையில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிய அமைச்சர் சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன பின்னும் ஒரு அனுதாபம் கூட தெரிவிக்காத ஸ்டாலின், நேரடியாக சென்று பெயரளவில் 5 லட்சம் ரூபாயை காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு வழங்கியதாகவும், பின்னர் காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என ட்விட்டரில் பதிவிட்டு, காவல் அதிகாரியின் மரணத்திலும் அரசியல் செய்வதாகவும் அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டினார்.