வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:19 IST)

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என்பதும் ஆனால் இந்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்காவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் அந்த அணையில் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பல பணிகளை முடித்த பின்பு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்