வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:36 IST)

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து அதிமுக போராட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள நீர்மட்டம் குறித்த பிரச்சனை தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இடையே இருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பு அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மழையால் பயன்பெறும் 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிமுக அதிரடியாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசுக்கும், சப்பைகட்டு கட்டும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நவம்பர் 9ஆம் தேதி அதிமுக நடத்தும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது