திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (14:13 IST)

ஆளுனர் ரவியை நேரில் பார்க்க திடீரென செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்: என்ன காரணம்?

duraimurugan
ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சனம் செய்த அமைச்சர்களில் ஒருவரான அமைச்சர் துரைமுருகன் இன்று திடீரென ஆளுநரை பார்க்க சென்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவியை திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்தில் விவாதம் செய்யட்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த நிலையில் ஆளுநர் ரவியை சந்திக்க சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனுக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவர் ஆளுநர் மாளிகை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலர் இலாக்கா மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் ஒரு சிலர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்றும்  கூறப்படுகிறது.
 
Edited by Mahendran