அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல்
siva| Last Updated: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (12:46 IST)
அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல்
தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 13ஆம் தேதி மூச்சு திணறலால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும், தற்போது தொடர் தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு உள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது

விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சைக்கு பின், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
பாபநாசம் தொகுதியில் கடந்த மூன்று முறை வெற்றி பெற்று, தற்போது வேளாண் துறை அமைச்சராக துரைக்கண்ணு அவர்கள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :