புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (17:28 IST)

கும்மாங்குத்து நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர்..

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கருப்பணன் மேள தாளத்திற்கு நடனமாடி வாக்கு சேகரித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள்ன் தீவிர பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியின் செம்மேடு பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் மேள தாளத்திற்கு நடனமாடி வாக்குகளை சேகரித்தார். ஒரு மாநில அமைச்சர் இவ்வாறு வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.