செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (09:21 IST)

நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட... ஸ்டாலினுக்கு கவுண்டர் கொடுத்த ஓபிஎஸ்!!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக முதல்வராகும் யோகம் இல்லை என பிரச்சாரத்தில் பேசியுள்ளார் துணை முதல்வர் ஓபிஎஸ். 
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது திமுக தலைவரை விமர்சித்தார். ஓபிஎஸ் பேசியதாவது, 
ஸ்டாலினுக்கு ஒரே ஆசை. அது முதல்வராக வேண்டும் என்ற ஆசை. ஆனால் எந்த காலத்திலாவது ஸ்டாலின் முதல்வர் ஆக முடியுமா? முடியவே முடியாது. ஏனென்றால் ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இல்லை என பேசிக்கொண்டிருந்தார். 
 
அப்போது ஓபிஎஸ் அருகில் இருந்த அமைச்சர் சிவி சண்முகம் ஏதோ  முணுமுணுக்க, ஓபிஎஸ் ஒரு படத்தில் வடிவேலுவை பார்த்து சொல்வார்கள் ''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட'' என்று அதுமாதிரி ஸ்டாலின் அவர்களே நீங்க அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீர்கள் என பேசினார்.