திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (14:02 IST)

மு. க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் வியாபாரி - முதல்வர் பழனிசாமி

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்க்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே தற்போது நடைபெறும் பிரச்சாரத்திலும் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. 
 
இந்நிலையில் அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாரயணனை  ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஏர்வாடி பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இன்றைய பிரச்சாரத்தின் போது முதல்வர்  பேசியதாவது : திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் கனவு காண்கிறார். அவர் மக்களுக்கு பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார். திமுக கட்சி பச்சோந்தி போன்று மாறும் என அடுக்கடுக்காக விமர்சித்தார்.
 
மேலும், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது, மக்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு நகைகளை   எல்லாம் மீட்டுத் தருவதாக உறுதி அளித்தார் ஸ்டாலின்.ஆனால் மக்கள் இப்போது அந்த வாக்குறுதியை நம்பி தவிப்பதாகவும் கூறினார்.