செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (14:05 IST)

ஜுன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் இடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு ஏற்கப்படும் என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். 
 
அக்னி நட்சத்திர வெயில் மற்றும் கடுமையான கோடை வெப்பம் இருப்பதால் பள்ளிகள் ஒன்று அல்லது இரண்டு வாரம் கழித்து திறக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி ஜூன் ஒன்றாம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது பள்ளி திறக்கும் தேதியை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran