1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (08:33 IST)

ரெண்டு வருஷமா லேப்டாப் தரல; நடவடிக்கை எடுத்த அன்பில் மகேஷ்! – அனைவருக்கும் லேப்டாப்!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு +2 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு லேப்டாப் தரப்படாமல் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது மாணவர்கள் லேப்டாப் தரவில்லை என புகாரளித்தது வைரலானது.

இந்நிலையில் லேப்டாப் வழங்குவது குறித்து சமீபத்தில் பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “பள்ளி மாணவர்களுக்கு வழங்க 1.75 லட்சம் லேப்டாப்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் வழங்கப்படாமல் இருந்த மாணவர்களுக்கும் தற்போது லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.