செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2024 (13:10 IST)

உடல்நிலை மோசம்.. காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார் அதிஷி..!

டெல்லிக்கு ஹரியானா மாநிலம் தண்ணீர் கொடுக்கும் வரை கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக அமைச்சர் அதிஷி அறிவித்திருந்த நிலையில் 5 நாள் முடிவடைந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
டெல்லியில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹரியானா மாநிலம் டெல்லிக்கு தண்ணீர் தர வேண்டும் என்று டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டார். 
 
காலவராயற்ற உண்ணாவிரதம் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளில் அதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேலும் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்காவிட்டால் அவரது உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் எச்சரித்தனர்.
 
இதனை அடுத்து இன்று அதிகாலை 3.45 மணியளவில் டெல்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Mahendran