1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (17:02 IST)

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்..! பிரதமருக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்..!!

Atishi
டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பிரதமர் மோடி,  இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி எச்சரித்துள்ளார். 
 
தலைநகர் டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது. குடிநீருக்காக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களும் குடிநீர் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டன. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியாமல் ஆம் ஆத்மி அரசு திணறி வருகிறது.
 
இந்நிலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதர் மோடி தலையிட வேண்டும் என்று டெல்லி அமைச்சர் அதிஷி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியின் தண்ணீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார்.  

 
அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதற்கு தீர்வு இல்லை என்றால் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று அமைச்சர் அதிஷி எச்சரித்துள்ளார்.
 
 .