மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
எனவே மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த இரு நாட்களுக்கு மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
மேலும், உதவிக்கு
TN SDMA மாநில உதவி எண்: 1070
மாவட்ட உதவி எண்: 1077
வாட்சாப்: 9445869848
ChennaiCorp: 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.