வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (20:20 IST)

ரூ.5 க்கு மெட்ரோ ரயில் பயணம்...மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில்  ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அவ்வப்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

இந்த நிலையில்  சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி ( ஞாயிறு ஒரு நாள் மட்டும் ரூ.5 கட்டத்தில்  பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்தது. இந்த நிலையில் வரும்  17 ஆம் தேதி இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மெட்ரோ இன்று புதிதாக அறிவித்துள்ளது.

3 ஆம் தேதி  புயல் காரணமாக அதிக பயணிகள் இச்சலுகையை பயன்படுத்த முடியாது என்பதால் கூடுத்தலாக மற்றொரு நாள் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாட்டிக் கியூ ஆர், வாட்ஸ் ஆப், போன் பே மூலம் பெறும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.