மெட்ரோ ரயில் புதிய இயக்க நேரம் அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், நாளை (03.12.2023) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் புதிய நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:
''ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ இரயில் சேவை நேரத்தில் மாற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய மெட்ரோ இரயில் சேவைகள் அட்டவணையின் படி, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், நாளை (03.12.2023) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் புதிய நேர அட்டவணையின் படி இயக்கப்படும்:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' என்று தெரிவித்துள்ளது.