திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 அக்டோபர் 2025 (11:05 IST)

கரூர் துயர சம்பவம்: சி.ஆர்.பி .எப்., அதிகாரிகளிடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

கரூர் துயர சம்பவம்: சி.ஆர்.பி .எப்., அதிகாரிகளிடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் வருகையின்போது கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து சி.ஆர்.பி.எஃப்.  அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
விஜய்யின் பாதுகாப்பில் 24 மணி நேரமும் 11 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த வீரர்களிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது.
 
விஜய்க்கான பாதுகாப்பு பணியில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் இன்று அல்லது நாளை அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அந்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் சென்னை வந்து விசாரணை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran