தர்பாருக்கு தூபம் போட்ட ரஜினி... எல்லாம் ப்ரமோஷ்னல் ட்ரிக்ஸ்!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:06 IST)
எப்போதும் தனது பட ரிலீஸுக்கு முன் அரசியல் பேசும் ரஜினி இம்முறையும் அதே ட்ரிக்ஸை கையாண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.  
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர்.  
 
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என தெரிவித்திருந்தார். 
 
அதனை தொடர்ந்து தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் நீடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ரஜினி பாஜகவுக்கு எதிராக பேசியதால் இன்றைய டாக் அவர்தான். ரஜினியின் பேச்சை பல அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். 
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரஜினி தனது தர்பார் படத்திற்காக இப்போதே ப்ரமோஷனை துவங்கிவிட்டார் என பேசி வருகின்றனர். நேற்று தர்பார் மோஷன் போஸர் வெளியான நிலையில் அடுத்தடுத்து படம் குறித்த அப்டேட்டுகள் வர இருப்பதால் வழக்கம் போல் அரசியல் பேசி படத்தை ப்ரமோட் செய்ய ரஜினி துவங்கிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


இதில் மேலும் படிக்கவும் :