ஞாயிறு, 21 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : ஞாயிறு, 21 டிசம்பர் 2025 (16:24 IST)

தவெக ஜெயிக்காது.. விஜய் செய்றது தப்பு.. தெறிக்கவிட்ட ரங்கராஜ் பாண்டே...

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக ஒரு விமர்சனமும் செய்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது. அதேநேரம் திமுகவின் எதிரிகளான அதிமுக, பாஜக போன்ற கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் விஜய் இப்போதும் தனித்தே செயல்பட்டு வருகிறார்.

‘எனது தலைமையில் கூட்டணி.. நான்தான் முதல்வர் வேட்பாளர்.. என் மீது நம்பிக்கை இருந்தால் வாருங்கள்’ என்பதே விஜயின் நிலைப்பாடாக இருக்கிறது. ஒருபக்கம் அதிமுகவும் பாஜகவும் ஏற்கனவே கூட்டணி அமைத்து விட்டது.. அந்த கூட்டணியில் விஜயை சேர்க்க அதிமுக தரப்பில் முயற்சி செய்தும் அது நடக்கவில்லை.

அவர்கள் பேசிய பேரங்களில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. திமுகவை எதிர்க்கும் கட்சிகளான அதிமுக, பிஜேபி, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுடன் விஜய் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும். அது நடக்காமல் விஜய் ஓட்டுகளை பிரித்தால் அது திமுகவிற்கே சாதகமாக முடியும் என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் விஜய்க்கு அந்த எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில்தான் பிரபல செய்தியாளரும், அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தவெக தனித்து நின்னா 234 தொகுதியில 10 தொகுதி கூட ஜெயிக்க முடியாது.. தவெக மட்டும் யாருடனும் கூட்டணி வைக்காம தனித்து போட்டுயிட்டு 10 தொகுதிகளில் ஜெயிச்சிட்டா நான் இனிமேல் அரசியல் பேசவே மாட்டேன். ஏன் சொல்றேன்னா இன்னைக்கு ஏழரை சதவீத ஓட்டு வச்சிருக்க சீமானின் நாம் தமிழர் கட்சியில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஆனால், அதே ஏழரை சதவீத ஓட்டு வச்சிருக்க திருமாவோட விடுதலை சிறுத்தை கட்சியில் இரண்டு எம்.பி.க்களும், 4 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க’ என பேசியிருக்கிறார்.